டிசம்பர் 6: 'டார்கெட்' விமானங்கள்
டெல்லி: பாபர் மசூதி இடிக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அந்த தினமான வரும் 6ம் தேதி இந்திய விமானங்கள், விமான நிலையங்கள் தாக்கப்படலாம் என மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது. இதைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநில அரசுகள், விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, விமானத் துறை ஆகியோருக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
இதையடுத்து விமானத்துறைச் செயலாளர் மாதவன் நம்பியார், டிஜிசிஏ தலைவர் நசீம் சைதி, தொழில்துறை பாதுகாப்புப் படையின் தலைவர் பாலி ஆகியோரை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார் விமானப் படைத் தலைவர்.
இதையடுத்து பயணிகளையும் அவர்களது உடமைகளையும் விமான நிலையம் மட்டுமின்றி, விமானத்தின் ஏறும் முன்பும் மீண்டும் சோதனையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளை விமான நிலையத்திலிருந்து விமானம் வரை கொண்டு செல்லும் வாகனங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் செல்வர்.
இதைத் தவிர சந்தேகத்துக்கிடமான பயணிகள் குறித்து தகவல் தருமாறு விமான சிப்பந்திகள், விமானத்துறை ஊழியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications