தீவிரவாத சவால்களை உறுதியுடன் சந்திப்போம்: ப.சிதம்பரம்
டெல்லி: நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சவால்களை அரசு உறுதியுடன் சமாளித்து உரிய தீர்வைக் காணும் என உள்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட ப.சிதம்பரத்தை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் சிதம்பரம் பேசுகையில், இந்தியா என்ற அடிப்படைக்கு எதிரான மிரட்டல் இது. இந்தியாவின் ஆன்மாவுக்கு ஏற்பட்டுள்ள மிரட்டல் இது.
மதச்சார்பின்மை, பல சமுதாய கூட்டிணைவு, சகிப்புத்தன்மை உள்ளிட்டவற்றை நாம் விரும்புகிறோம். இதற்கு ஏற்பட்டுள்ள இந்த மிரட்டல்களை நிச்சயம் நாம் வீழ்த்துவோம், இந்தியா வெற்றி பெறும்.
நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தீவிரவாத மிரட்டல்களை அரசு உறுதியுடன் சந்திக்கும். வெற்றி பெறும்.
நாடு முழுவதும் மக்களிடையே நிலவி வரும் கடும் கோபம் மற்றும் தீராத அதிர்ச்சியை நான் உணர்கிறேன், புரிந்து கொள்கிறேன், மதிக்கிறேன்.
நிலைமையை சமாளிக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் தனியாவும், ஒன்றாகவும் சேர்ந்து முழங்கியுள்ளன.
இந்தக் கருதுக்கள் பிரதமர் மன்மோகன் சிங் கூட்டிய கூட்டத்திலும் பிரதிபலித்தது என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications