மேலும் 5 தீவிரவாதிகள் எங்கே?-மீண்டும் தாக்கலாம்: பிரிட்டன்

இதுகுறித்து அந்த செய்தி கூறுவதாவது...
மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் மொத்தம் 10 பேர் ஈடுபட்டதாகவும், அதில் 9 பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும், ஒருவனை பிடித்துள்ளதாகவும் இந்தியப் பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தீவிரவாதிகள் வந்த இந்திய மீன் பிடி படகை கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர் அதில் 15 பேருக்கான உடைகள் உள்ளிட்டவை இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த படகில் 15 உடைகள் இருந்தன. 15 டூத் பிரஷ்களும் கூட இருந்தன. எனவே மும்பையில் சிக்கி 10 பேரைத் தவிர மற்ற 5 பேர் மும்பைக்குள் தலைமறைவாக பதுங்கியிருக்கலாம் என கருத வேண்டியுள்ளது.
இவர்கள் மும்பையில் மேலும் தாக்குதலில் ஈடுபட முயற்சிக்கலாம். அல்லது வேறு தாக்குதலுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய ஊடுறுவியிருக்கலாம். அல்லது முக்கியத் தகவல்களை திரட்டிக் கொண்டிருக்கலாம்.
இதுதவிர பத்து பேர் மட்டும் ஊடுறுவியிருக்க முடியாது என்ற கருத்தும் மும்பையில் உள்ளது. மும்பையின் எட்டு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே குறைந்தது 2 டஜன் பேராவது வந்திருக்க வேண்டும் என மும்பை போலீஸாரும், பொதுமக்களும் கருதுகின்றனர் என்று அச்செய்தி கூறுகிறது.












Click it and Unblock the Notifications