கடல் வழி தாக்குதல்-2 முறை இந்தியாவை எச்சரித்த யுஎஸ்

மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு அமெரிக்கா, இந்தியாவை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சிஎன்என் வெளியிட்டுள்ள செய்தியில், கடல் மார்க்கமாக மும்பை தாக்கப்படலாம் என ஒரு மாதத்திற்கு முன்பே அமெரிக்க தீவிவராதத் தடுப்புப் பிரிவு, இந்திய அரசை எச்சரித்திருந்தது.
ஒரு முறை அல்ல, இரு முறை இந்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
குறிப்பாக தாஜ் மஹால் ஹோட்டல் தாக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டு அமெரிக்க உளவுத்துறை எச்சரித்திருந்தது.
மும்பைக்குள், கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்கலாம் எனவம், இதுதொடர்பாக விழிப்புடன் இருக்குமாறும் இந்தியாவை அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கடல் பகுதியில் இந்திய அதிகாரிகள் பாதுகாப்பையம், கண்காணிப்பையம் தீவிரப்படுத்தியிருந்தனர். ஆனால் படிப்படியாக இது பின்னர் குறைந்து விட்டது. இதுவே தீவிரவாதிகள் எளிதில் நுழைய காரணமாகி விட்டது.
மேலும், நவம்பர் 18ம் தேதி இந்திய உளவுப் பிரிவினர், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஒரு முக்கியத் தலைவரின் தொலைபேசி பேச்சை ஒட்டுக் கேட்டுள்ளனர்.
அதில் கடல் மார்க்கமாக தாக்குதல் நடத்தப்படும் என்ற செய்தியும் இந்திய உளவுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது என்று அந்த செய்தி கூறுகிறது.


Click it and Unblock the Notifications
