மீண்டும் ஒரு புயல் சின்னம்-தமிழகத்தை நோக்கி...!
Subscribe to Oneindia Tamil

நிஷா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை கொட்டியது. இதில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.
கடந்த இரு நாட்களாகத் தான் மழை நின்றது. இந் நிலையில் மீண்டும் வங்க கடலில் இந்தோனேசியாவுக்கு வட மேற்கு பகுதியில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
அது தொடர்ந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சனிக்கிழமை வாக்கில் சென்னைக்கு அருகே வந்து விடும் என்பதால் அன்று இரவு முதல் தமிழகத்தில் மீண்டும் மழை ஆரம்பிக்கவுள்ளது.
சமீபத்திய புயல் மழை ஏற்படுத்திய பாதிப்பே இன்னும் விலகாமல், பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் உருவாகியுள்ள புயல் குறித்த செய்தி தமிழக, குறிப்பாக சென்னை மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications