பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொடா: இல.கணேசன்
கிருஷ்ணகிரி: பாஜக ஆட்சிக்கு வந்தால் பொடா சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள் வந்த பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய, மகாராஷ்டிரா ஆட்சிகளின் அலட்சிய போக்கு காரணமாகவே மும்பை தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் - இ- தொய்பா அமைப்பே காரணம். மும்பை தாக்குதல் சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர், கமாண்டோ படையினர், ராணுவவீரர்கள் ஆகியோருக்கு உரிய முறையில் மக்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
மும்பை தாக்குதல் சம்பவத்தை விட ப.சிதம்பரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் பதவி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.
இது போன்ற தீவிரவாத தாக்குதல்களை தடுக்கும் வகையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொடா சட்டம் கொண்டு வரப்படும். அதன் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்படும்.
ஒகேனக்கல் கூட்டுகுடி நீர் திட்டம் கிருஷ்ணகிரி,தர்புரி மாவட்ட மக்களின் நீண்ட கனவுத் திட்டமாகும். இந்த திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications