'மும்பை': அத்வானியுடன் ப.சிதம்பரம் சந்திப்பு
டெல்லி: மும்பை தாக்குதல்கள், அதி்ல் பாகிஸ்தானி்ன் தொடர்புகள், அது தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்கள், மத்திய அரசு அமைக்கவுள்ள புதிய பெடரல் ஏஜென்சி ஆகியவை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக தலைவருமான எல்.கே.அத்வானியை சந்தித்து விளக்கினார்.
அப்போது இந்த விஷயத்தில் அடுத்து என்ன வகையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து அத்வானியும் சில யோசனைகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக பேசினர்.
முன்னதாக மும்பை தாக்குதல் தொடர்பாக பாஜகவின் உயர் மட்டக் கூட்டமும் டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய முன்னாள் வெளியுறவு-நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங்,
பாகிஸ்தானுக்கு எதிராக அரசு எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு பாஜக முழுமையாக துணை நிற்கும். ஆனால், இந்த விஷயத்தில் எங்களுடன் மத்திய அரசு முழுமையாக விவாதிக்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications
