அசோக் சவான் மகாராஷ்டிரா முதல்வர் - புஜ்பல் து. முதல்வர்

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் பதவி விலகி விட்டார். இதையடுத்து அடுத்த முதல்வரைத் தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் மும்முரமாக ஈடுபட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நெருக்குதலும் இருந்ததால் அவர்களுக்கும் ஒத்துவரக் கூடிய முதல்வரைத் தேர்வு செய்ய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது காங்கிரஸ்.
மகாராஷ்டிர தொழில்துறை அமைச்சர் அசோக் சவானை முதல்வராக்க காங்கிரஸ் நினைக்க அதற்கு தேசியவாத காங்கிரசின் ஆதரவு கிடைக்கவில்லை. அவர்கள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை முதல்வராக்க வேண்டும் என நெருக்குதல் தந்து வந்தனர்.
முதலில் இதற்குப் பணிந்த காங்கிரஸ் பின்னர் ஷிண்டேவை முதல்வராக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு விட்டு நாராயண் ரானேவை முதல்வராக்குவோம் என்றது. சிவசேனையிலிருந்து காங்கிரசுக்கு வந்த ரானேவை சமாளிப்பது கஷ்டம் என்பதால் அவரையும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பவார் ஏற்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து அசோக் சவானையே ஏற்கத் தயார் என்று பவார் தரப்பு இறங்கி வந்தது.
இந் நிலையில் இன்று காலை அந்தோணி மற்றும் பிரணாப்புடன் சோனியா முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தை முடித்து விட்டு வந்த பிரணாப் முகர்ஜி, காத்திருந்த செய்தியாளர்களுக்குப் பதிலளிக்காமல் வேகமாக கிளம்பிப் போய் விட்டார்.
இதற்கிடையே மேலிட அழைப்பின் பேரில் அசோக் சவானும், நாராயண் ராணேவும் டெல்லி விரைந்தனர்.
இதையடுத்து அசோக் சவானை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்தது. இதை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மறைந்த முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் மத்திய அமைச்சருமான எஸ்.பி. சவானின் மகன் தான் அசோக் சவான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் துணை முதல்வராக ஜகன் புஜ்பல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காவல்துறையை உள்ளடக்கிய உள்துறையை அவர் கவனிப்பார்.
-
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications