லோக்சபா: சீட் பெற விரும்பும் அதிமுகவினர் விண்ணப்பிக்கலாம் - ஜெ.
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விண்ணப்பிக்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது.
அனைத்துத் தேர்தல்களிலும், அனைவருக்கும் முன்பாக வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்களைப் பெற்று வேட்பாளர்களைத் தேர்வு செய்து முன்கூட்டியே அறிவிப்பது அதிமுக ஸ்டைல்.
அந்த வகையில், லோக்சபா தேர்தல் எப்போது என்று இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், பாஜக பாணியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் வேலையில் இறங்கி விட்டது அதிமுக. அதற்கு முதல் கட்டமாக தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விண்ணப்பிக்கலாம் என கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அடுத்த லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர், டிசம்பர் 27ம் தேதிக்குள் தங்களது விருப்ப விண்ணப்பங்களை அனுப்பலாம்.
டிசம்பர் 10ம் தேதி முதல் சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ரூ. 10,000 கொடுத்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் முன்பாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு பிரசாரத்தையும் தொடங்குவது ஜெயலலிதாவின் வழக்கம். கடந்த 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், ஜெயலலிதா தனது பிரசாரத்தை ஜரூராக தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications