நெல்லை,தூத்துக்குடிக்கு உளவுத்துறை எச்சரிக்கை
நெல்லை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஓட்டி நெல்லையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறலாம் என உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து முக்கிய இடங்களை கண்காணிக்க போலீசாருக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை நடைபெறுகிறது. முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
பஸ், ரயில் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர லாட்ஜிகளில் சோதனைப் போடப்பட்டு வருகிறது. சந்தேகப்படும் நபர்கள் யாராவது தங்கியுள்ளனரா என்று கண்காணித்து வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலும், குமரி மாவட்டத்திலும் உள்ள பஸ், ரயில் நிலையங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. தமிழகத்தை சேர்ந்த தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நவீன கருவிகள் மற்றும் ஆயுதங்களுடன் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரு போர் கப்பல்கள் - 24 மணி நேர ரோந்து
இதற்கிடையே, தமிழக கடல் பகுதியில் இரு போர் கப்பல்கள் 24 மணி நேரமும் ரோநது சுற்றி வருகின்றன.
நெல்லை ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு பாதுகாப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் கடற்படை தளத்திற்கு லெப்டினேட் கமாண்டர் ஐவின் சாம் நெல்லையில் நிருபர்களிடம் கூறுகையில், மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கடல் பகுதியில் இந்திய கடற்படை தனது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
தமிழக கடல் பகுதியில் இரு போர்க்கப்பல்கள் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றன. மேலும் கடல் பகுதியில் இருக்கும் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை விட தற்போது இரு மடங்கு அதிகமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விஜயநாராயணம் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தள பாதுகாப்பும் இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications