600 நிறுவனங்கள் மூடல்: மேலும் 2,000 நிறுவனங்களுக்கு மூடுவிழா!

இதுவரை நாடு முழுவதும் 600 உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி முடங்கிவிட்டது. தொழிற்சாலைகளை இழுத்து மூடிவிட்டதாக அவை அறிவித்துள்ளன. மேலும் 2000 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்த ஆலோசித்து வருகின்றன.
வாகனக் கடன் வட்டி கடுமையாக உயர்ந்துவிட்டதால் வாகனங்கள் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி மற்றும் தவணை தவறுவோர் அதிகரிப்பால் வாகனக் கடன் அளிப்பதை பல வங்கிகளும் நிறுத்தி விட்டன.
இந்நிலையில், தேவை குறைந்ததால் முன்னணி நிறுவனங்களான டாடா, மகிந்திரா உட்பட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூட, உற்பத்தியைக் குறைத்து வருகின்றன. ஜாம்ஷெட்பூர் ஆலையை கடந்த மாதத்தில் டாடா மோட்டார்ஸ் இரண்டு முறை 8 நாட்கள் வரை மூடியது.
இதனால், அந்த தொழிற்சாலையைச் சுற்றி அமைந்துள்ள உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உற்பத்தி அதிகரிக்கப்படாததால், அவற்றில் சுமார் 600 நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஜாம்ஷெட்பூர் டாடா ஆலையில் தினமும் 500 ஆக இருந்த வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு, இப்போது 125 முதல் 150 ஆகக் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உதிரிபாகக் கொள்முதலும் குறைந்துவிட்டது.
இதேபோன்ற நிலை முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹூண்டாய், லேலண்ட் போன்றவற்றிலும் நிலவுகிறது.
வாகன தயாரிப்பில் முன்னணி வகிக்கும் சென்னை, உதிரி பாகத் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஓசூர் உட்பட பல நகரங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் உர்பத்தியை நிருத்தியுள்ளன அல்லது குறைத்து வருகின்றன.
இதுபற்றி சிறு, குறு மற்றும் நடுத்தர வாகன தொழிற்சாலைகளுக்கான இந்திய கூட்டமைப்பின் பொதுச் செயலர் அனில் பரத்வாஜ் கூறுகையில், ஆர்டர்கள் கடுமையாக சரிந்து விட்டன. உதிரிபாக தயாரிப்பாளர்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையும் கிடைக்கவில்லை. எனவே, தினசரி செலவுக்கே சிறிய நிறுவனங்கள் திண்டாடும் நிலை உள்ளது. எனவே, நாடு முழுவதும் 2,000 சிறு உதிரிபாக நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன என்றார்.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சென்னையில் கட்டப்படும் புதிய பாலங்கள்.. முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
தேசிய நெடுஞ்சாலைகளில் விஐபி கலாச்சாரம் ஒழியும்! அதிகாரிகளுக்கு சுங்கக்கட்டண விலக்கு ரத்து! திட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications