ம.பி: சிறந்த நிர்வாகம் தந்த பாஜக மீண்டும் வெற்றி

இங்கு 142 இடங்களை அந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் வெறும் 70 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மற்ற கட்சிகள் 18 இடங்களில் வென்றுள்ளன.
மிகச் சிறந்த நிர்வாகியாக பெயர் எடுத்துள்ள செளகானையே அந்தக் கடசி மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் சந்தித்தது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இந்த மாநிலத்தில் 9 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் பாஜகவுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. அங்கு இரு கட்சிகளி்ன் வாக்கு வங்கிகளையும் பகுஜன் சமாஜ் சுரண்டியுள்ளது. அதிலும் காங்கிரசின் வாக்குகளையே அந்தக் கட்சி அதிகமாக சுரண்டியுள்ளது. இதன்மூலம் பாஜகவின் வெற்றிக்கு அந்தக் கட்சி மறைமுகமாக உதவியுள்ளது.
ஆனாலும் முதல்வர் செளகானின் மிகச் சிறந்த செயல்பாடே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.
உமா பாரதி படுதோல்வி:
அதே நேரத்தில் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவரான முன்னாள் முதல்வர் உமா பாரதியின் பாரதீய ஜன் சக்தி படுதோல்வி அடைந்துள்ளது.
செளகானை முதல்வராக அறிவித்து பாஜக போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளராக யாரையும் அறிவிக்காமலேயே தேர்தலை சந்தித்தது.
முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், முன்னாள் துணை முதல்வர் சுபாஷ் யாதவ், ஜமுனா தேவி, மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்கின் மகன் அஜய் சிங், முன்னாள் சட்டபை சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் திவாரி ஆகியோர் முதல்வர் பதவிக்கான கனவில் இருந்தனர்.
இந்தக் கனவில் பாஜக மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது. இந்த மாநிலத்தில் 5 ஆண்டுகள் ஆட்சி நடத்திய பின்னரும் பாஜக இங்கு மிகப் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
சிறந்த நிர்வாகத்தால் வென்றோம்-செளகான்:
எந்த ஒரு கட்சியும் சிறந்த நிர்வாகத்தை, திறந்த நிர்வாகத்தைத் தந்தால் மக்களின் ஆசிர்வாதம் மீண்டும் கிடைக்கும் என்பதற்கு இந்த வெற்றி ஒரு உதாரணம் என்றார்.












Click it and Unblock the Notifications