3 மாநிலங்களில் காங்-2ல் பாஜக வெற்றி

இதில் ராஜஸ்தான், டெல்லி, மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கரில் பாஜக வென்றுள்ளது.
முதல்வர் வசுந்தரே ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடந்த ராஜஸ்தானில் அக் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. 200 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் 97 இடங்களில் காங்கிரசும், 77 இடங்களில் பாஜகவும் வென்றுள்ளன. மற்ற கட்சிகள் 26 இடங்களில் வென்றுள்ளன.
அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் பாஜகவே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அங்கு முதல்வர் செளகான் தலைமையில் மீண்டும் பாஜகவே ஆட்சியமைக்கிறது. 230 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக 142 இடங்களிலும் காங்கிரஸ் 70 இடங்களிலும் வென்றுள்ளன. மற்ற கட்சிகள் 18 இடங்களைப் பிடித்துள்ளன. இங்கு காங்கிரசுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் ஆளும் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. 69 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் காங்கிரஸ் 42 இடங்களில் வென்றுள்ளது. இதனால் முதல்வர் ஷீலா தீட்சித்தே மீண்டும் அம் மாநிலத்தில் ஆட்சியமைக்கிறார். இங்கு பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சி 23 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மற்ற கட்சிகள் 4 இடங்களைப் பிடித்துள்ளன.
90 தொகுதிகள் கொண்ட சட்டீஸ்கரில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பாஜக, காங்கிரஸ் இரண்டுமே சம நிலையில் வென்று வந்தன. இதனால் அங்கு இழுபறியான சூழல் நிலவியது. ஆனால், அடுத்தடு்த்த சுற்று எண்ணிக்கையில் பாஜக முன்னிலைக்கு வந்துவிட்டது.
அங்கு பாஜக 49 இடங்களிலும் இதனால் அந்த மாநிலத்தை பாஜகவே காங்கிரஸ் 39 இடங்களிலும் மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வென்றுள்ளன.
மிசோரம் மாநிலத்திலும் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 40 இடங்கள் கொண்ட சட்டசபையில் ஆளும் மிசோரம் தேசிய முன்னணி கட்சி வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 31 இடங்களைப் பிடித்து பெரும் வித்தியாசத்தில் ஆட்சி அமைக்கிறது.
டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிஸோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும் கடந்த மாதம் பல கட்டமாக தேர்தல் நடந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 7 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
இந்த நிலையில் காஷ்மீர் தவிர மற்ற ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
இந்தத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுதால் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரசுக்கு சாதமாக வந்துள்ளதால் அந்தக் கட்சி பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications