திருவிழாவில் சப்பரம் செல்ல தடை-மக்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோயில் அருகே கோயில் திருவிழாவில் சப்பரம் இழுத்துச் செல்ல தடை விதித்ததை கண்டித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி கண்டனப் பேரணி நடத்தியதால் அங்கு பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

நாகர்கோயிலை அடுத்த பிள்ளையார்புரத்தில் உள்ளது முத்தாரம்மன் கோயில். இந்த கோயிலில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் கோயில் திருவிழாவின் போது சப்பர பவனி ஒரு குறிப்பிட்ட சாலை வழியாக சென்ற போது, கலவரம் ஏற்பட்டது. இதில் போலீசார் தடியடி நடத்தியபோது மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் இந்த கோயிலில் விழாவின் போது வாகன ஊர்வலம் செல்ல நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரி டிஎஸ்பி ஸ்டான்லி மைக்கேல் சப்பர பவனி செல்ல தடை விதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் திருவிழா நிறுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி சுமார் 300 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி இன்று பேரணியாக புறப்பட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+