லஷ்கரை வளர்த்த ஐ.எஸ்.ஐ: அமெரிக்கா
நியூயார்க்: அப்பாவி உயிர்களைக் கொன்று அட்டகாசம் செய்து வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை போஷித்து, வளர்த்து விட்டது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் வெளிப்படையாகக் கூறியுள்ளனர்.
உலகின் மிகப் பெரிய தீவிரவாத இயக்கங்களுள் ஒன்றாக லஷ்கர் கருதப்படுகிறது. இந்தியாவில் நடந்த பல தீவிரவாத செயல்களுக்கு லஷ்கர் இ தொய்பாவும், இன்னொரு பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மதுவும்தான் காரணம் என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு.
இந்த நிலையில் லஷ்கர் அமைப்பை வளர்த்து ஆளாக்கிய முழுப் பெருமையும் ஐ.எஸ்.ஐ அமைப்பையே சாரும் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் முதல் முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
இதுவரை இதை மறைமுகமாகவே கூறி வந்த அமெரிக்கா இப்போது வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளது.
இது குறித்து சில அமெரிக்க உளவு அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தனக்குக் கிடைக்கும் உளவுத் தகவல்களை லஷ்கர் அமைப்புடன் தொடர்ந்து பரிமாறி வந்துள்ளது.
மேலும் லஷ்கர் அமைப்புக்குத் தேவையான பொருட்கள், நிதியுதவி ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி வருகிறது ஐ.எஸ்.ஐ. இரு அமைப்புகளும்தான் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு முழுக் காரணம்.
மும்பைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது லஷ்கர் அமைப்பு மேலும் வலுவடைந்துள்ளது தெரிய வருகிறது. எனவே அந்த அமைப்பின் செயல்பாடுகள், திறன்கள் குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும். அவர்களுக்கு மேலும் பல முக்கிய இடங்களுடன் தொடர்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
லஷ்கர் அமைப்புக்கும், ஐ.எஸ்.ஐக்கும் இடையிலான தகவல் தொடர்புப் பாலமாக கம்யூனிகேஷன் நிபுணரான ஜரார் ஷா என்பவர் செயல்பட்டு வருகிறார். மும்பை தாக்குதல் சம்பவத்திற்கும் இவர்தான் மையப் புள்ளியாக செயல்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசு கடந்த 2002ம் ஆண்டு லஷ்கர் அமைப்பைத் தடை செய்து விட்டாலும் கூட, ஐ.எஸ்.ஐக்கும், லஷ்கர் அமைப்புக்கும் இடையிலான தொடர்பில் எந்த தொய்வும் இல்லை. வழக்கம் போலவே இரு அமைப்புகளும் நெருக்கமாக உள்ளன.
ஐ.எஸ்.ஐ அதிகாரிகளுக்கும், லஷ்கர் அமைப்புகளுக்கும் இடையிலான தொடர் சந்திப்புகள் குறித்த ஆவணங்கள், ஆதாரங்கள் அமெரிக்காவிடம் உள்ளன. இந்த சந்திப்புகளின்போது காஷ்மீர் குறித்த பல முக்கியத் தகவல்களை இரு அமைப்புகளும் பகிர்ந்து கொண்டுள்ளன.
தகவல் பரிமாற்றத்தோடு நில்லாமல் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிப்பது, நிதியுதவி செய்வது உள்ளிட்ட பல உதவிகளையும் ஐ.எஸ்.ஐ. வழங்கி வருகிறது.
லஷ்கர் அமைப்புக்கு உதவுவதை மிக மிக தெளிவாக திட்டமிட்டு செய்து வருகிறது ஐ.எஸ்.ஐ என்று கூறியுள்ளனர் அவர்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications