இது அதிமுக ஸ்டைல்..எம்பி தேர்தல்-ஜெ போட்டியிட மனுக்கள்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி மாஜி அமைச்சர்கள் மனுக்களை குவித்துள்ளனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை அதிமுக தலைமைக் கழகத்தில் மனுக்களை அளிக்கலாம் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதையடுத்து அதிமுக மாஜி அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பலரும் ஜெயலலிதா போட்டியிடக் கோரி மனுக்களை அளித்தனர். ஆண்டுதோறும் அதிமுகவில் நடக்கும் நிகழ்ச்சி இது. ஜெயலலிதா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாடடார் என்றாலும் கூட இவ்வாறு போட்டி போட்டுக் கொண்டு மனு செய்து பணம் கட்டுவது அதிமுகவில் வழக்கம். அந்த வகையில் இந்த முறையும் மனுக்கள் தரப்பட்டுள்ளன.
வட சென்னை தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி அக் கட்சியி் அவைத் தலைவர் மதுசூதனன் மனு அளித்தார். தேனி தொகுதியில் போட்டியிட மாஜி முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பொன்னையனும் மனு அளித்தனர்.
ஈரோடு தொகுதியில் போட்டியிடக் கோரி மாஜி அமைச்சர்கள் முத்துசாமி, செங்கோட்டையன் ஆகியோரும், சிவகங்கையில் போட்டியிடக் கோரி கோகுல இந்திராவும், கோவையில் போட்டியிடக் கோரி மாஜி அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனும், தர்மபுரியில் போட்டியிட மாஜி அமைச்சர் தம்பிதுரையும், ராமநாதபுரத்தில் போட்டியிட சத்தியமூர்த்தியும் மனு அளித்தனர்.
வட சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி எம்.எல்.ஏ. சேகர்பாபு மனு கொடுத்தார்.
மத்திய சென்னையில் ஜெயலலிதா போட்டியிட பாலகங்காவும், தென் சென்னையில் போட்டியிட வி.பி.கலைராஜனும், கன்னியாகுமரியில் ஜெயலலிதா போட்டியிட மாஜி அமைச்சர் தளவாய்சுந்தரமும் தென் சென்னையில் ஜெயலலிதா போட்டியிட டி.யு.சி.எஸ். சீனிவாசனும் மனு கொடுத்தனர்.
அதே போல தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி மனோஜ்பாண்டியன் மனு அளித்தார்.
சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டு முன்னாள் எம்.பி. வக்கீல் ராஜரத்தினம் மனு கொடுத்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications