இந்தியாவின் வலியை உணர்கிறேன்: 'பல்டி' சர்தாரி
நியூயார்க்: இந்தியாவின் வலியை நான் முழுமையாக உணர்கிறேன். அதேசமயம், தீவிரவாதத்தால் பாகிஸ்தானும், அதன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இந்தியாவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி.
முதலில் தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம் என்று கூறிவிட்டு பின்னர் பின் வாங்கிய சர்தாரி இப்போது அமெரிக்க நெருக்குதலால் தீவிரவாதிகள் மீது சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இந் நிலையில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு சர்தாரி அளித்துள்ள பேட்டி:
பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை ஒடுக்குவதில் உறுதியாக உள்ளது. இதைத்தான் ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த தீவிரவாத வேட்டை நிரூபித்துள்ளது.
எனவே இந்தியா எங்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு முன்பு நிறுத்தி, நிதானித்து பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
பாகிஸ்தான் அரசும் கூடத்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. நாங்களும் தொடர்ந்து அவர்களின் வேட்டைக்காடாகத்தான் இருக்கிறோம்.
ஆனால் பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாத செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களை எனது அரசு சும்மா விடாது. அவர்களை ஒடுக்குவோம்.
மும்பை சம்பவத்திற்குப் பின்னர் இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதேசமயம், பாகிஸ்தானை கண்மூடித்தனமாக குற்றம் சாட்டுவதால் ஏற்கனவே உள்ள சிக்கல்கள் மேலும் பெரிதாகத்தான் செய்யும். அமைதி நிலையும் சீர்குலையும்.
பாகிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தி யார் தீவிரவாத செயலில் ஈடுபட்டாலும் அவர்களை சட்டத்தின முன் நிறுத்துவோம். அவர்களை தீவிரவாதிகளாக, கொலைகாரர்களாகத்தான் நாங்கள் கருதுவோம்.
இந்தத் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசுடன் எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. உண்மையில் நாங்களும் கூட அவர்களின் குறியாகத்தான் இருக்கிறோம்.
எனது மனைவி பெனாசிர் பூட்டோவும் தீவிரவாதத்திற்கு தனது உயிரை ஈந்தவர். மும்பை சம்பவத்தை நானும், எனது குழந்தைகளும் டிவியில் பார்த்தபோதெல்லாம் அதே வலியைத்தான் உணர்ந்தோம். இந்தியாவின் வலியை நாங்களும் உணர்ந்துள்ளோம்.
இந்தியாவை மட்டும் குறி வைத்து மும்பை தாக்குதல் நடத்தப்படவில்லை. மாறாக, பாகிஸ்தான் ஜனநாயக அரசுக்கும் நெருக்கடி தரும் வகையில் நடத்தப்பட்டதுதான் மும்பை சம்பவம். இந்தியா, பாகிஸ்தான் இடையில் நடந்து வரும் அமைதி நடவடிக்கைகளை சீர்குலைக்க நடந்த சதிதான் இது.
இந்தியாவும், பாகிஸ்தானும் சமரசமாக போகக் கூடாது என்று கருதும் விஷமிகள்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அந்த விஷமிகள் பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள், அண்டை நாட்டிலும் இருக்கிறார்கள்.
அமெரிக்காதான் காரணம் ..
உண்மையில் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பலமுடன் இருக்க காரணமே அமெரிக்காதான். சோவியத் யூனியன் படைகள், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது, இங்குள்ள தீவிரவாத அமைப்புகளை தூண்டி விட்டு, ஊக்கம் கொடுத்து அவர்களைப் பலப்படுத்தியதே அமெரிக்காதான்.
வலுவான பொருளாதாரம், நிலையான அரசு ஆகியவற்றின் மூலமே தீவிரவாதத்தை ஒடுக்க முடியும். இந்த கோணத்தில் உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூள தீவிரவாதிகள் விரும்புகிறார்கள். ஆனால் அதை தூதரக ரீதியில் தவிர்க்க பாகிஸ்தான் முயலுகிறது. உறுதியுடன் உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும், உறுதியான செயல்பாடுகளும், நிதானமும் மட்டுமே தீவிரவாதத்தை பழி வாங்க சரியான வழிகளாகும். அப்படி செய்தால் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே, இரு பெரும் கலாச்சாரங்களுக்கு இடையே சண்டை மூட்டி விட முயலும் தீவிரவாதிகள் தோல்வி அடைவார்கள் என்று கூறியுள்ளார் சர்தாரி.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications