நிதியமைச்சர் நியமனம்-பிரதமர் திடீர் ஒத்திவைப்பு
டெல்லி: மத்திய நிதியமைச்சர் பொறுப்புக்கு புதியவரை நியமிக்கும் முடிவை திடீரென பிரதமர் ஒத்திவைத்து விட்டது. தற்சமயத்திற்கு பிரதமர் வசமே இப்பொறுப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
நிதியமைச்சராக இருந்து வந்த ப.சிதம்பரம், உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து வந்த சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதைத் தொடர்ந்து அப்பொறுப்புக்கு மாற்றப்பட்டார். நிதியமைச்சர் பொறுப்பை தற்காலிகமாக தற்போது பிரதமரே வைத்துள்ளார்.
ஏற்கனவே அவரிடம் ஓய்வூதியர் நலன், பென்ஷன், திட்டம், அணுசக்தி மேம்பாடு, விண் வெளி ஆய்வு, நிலக்கரி, வனம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல்-செய்தி ஒளிபரப்பு என 6 இலாகாக்கள் உள்ளன.
இந்த நிலையில் அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டார். அப்போது நிதித்துறைக்கு புதிய அமைச்சரை நியமிப்பது குறித்தும் அவர் ஆலோசித்து வந்தார்.
5 பெயர்கள் பரிசீலனை:
நிதியமைச்சர் பொறுப்புக்கு தற்போது ஐந்து பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநராகவும், முன்னாள் ஆந்திர மாநில ஆளுநராகவும் இருந்த ரங்கராஜன், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத்,
மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், மேற்கு வங்க மாநில எம்.பி சென்குப்தா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
இருப்பினும் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கே வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீரென நிதியமைச்சர் நியமனத்தை பிரதமர் ஒத்திவைத்து விட்டதாக தெரிகிறது.
நிதித்துறை தொடர்பான நாடாளுமன்றப் பணிகளில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உதவியாக இருப்பார் என லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் ஆகியோரிடம் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து நிதியமைச்சர் பொறுப்புக்கு புதியவரை நியமிக்கும் முடிவை அரசு தள்ளிப் போட்டுள்ளது தெளிவாகியுள்ளது.
மன்மோகனுடன் ரங்கராஜன், கிருஷ்ணா சந்தி்ப்பு:
இந்த நிலையில் ரங்கராஜனும், எஸ்.எம்.கிருஷ்ணாவும் இன்று பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.
சந்திப்புக்குப் பின்னர் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான், விசேஷம் ஏதும் இல்லை என்றார். ரங்கராஜன் கூறுகையில், நான் பிரதமரை அடிக்கடி சந்திப்பது வழக்கம். அதுபோலத்தான் இதுவும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications