தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு
நெல்லை: பாபநாசம் அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்வதால் பாபநாசம் அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. 143 அடி கொள்ளவு கொண்ட இந்த அணை நிரம்பி விட்டதால் உபரி நீர் ஷட்டர்கள் வழியாக திறந்து விடப்பட்டது.
பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நேற்று அதிகாலை 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
நேற்றைய நிலவரப்பட்டி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 141.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4,941 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4,666 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணைப்பகுதியில் மேலணையில் 68 மி.மீ, கீழலணையில் 52 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 148.95 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையில் 103.40 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி அதிகரித்து 106.30 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 3,190 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கடனா நதி அணையிலிருந்து வினாடிக்கு 994 அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கடனாநதியிலிருந்து வெளியேறும் தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் தாமிரபரணியில் வெள்ளம் கரை புரண்டு ஒடுகிறது.
இதனால் நெல்லை, அம்பை, பாளை தாலுகாக்களில் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications