சட்ட உதவி கோரி பாக். தூதரகத்திற்கு கஸாப் கடிதம்

இந்தக் கடிதத்தை மும்பை போலீஸார், வெளியுறவுத்துறை மற்றும் உள்துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக இணை ஆணையர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மரியா கூறுகையில், தனது கடிதத்தில் நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன். தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்.
தனக்கு இந்திய வழக்கறிஞர்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. எனவே எனக்கு வேண்டிய சட்ட உதவிகளை பாகிஸ்தான் அரசு செய்ய வேண்டும். தூதரகத்திலிருந்து ஒரு பிரதிநிதியை இதுதொடர்பாக அனுப்பி வைக்க வேண்டும்.
சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் நடந்த மோதலின்போது கொல்லப்பட்ட தீவிரவாதி இஸ்மாயில் கான் உடலை பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தனது கடிதத்தில் கஸாப் கோரியுள்ளான் என்றார் மரியா.
கஸாப் டிசம்பர் 24ம் தேதி வரை போலீஸ் காவலில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
கஸாப் மீது நாட்டின் மீது போர் தொடுத்தல், கொலை, கொலைச் சதி, குற்றச் செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் தான் என்பது ஏற்கனவே நிரூபணமாகி விட்டது. அவனது தாய், தந்தையர் மற்றும் உறவினர்கள், அவன் சார்ந்த பரீத்கோட் கிராமத்தினர், கஸாப்பை அடையாளம் காட்டியுள்ளனர்.
ஆனால் கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுமாறு இந்தியாவுக்கு தேவையில்லாமல் கோரிக்கை வைத்துள்ளது பாகிஸ்தான். இந்தியா ஆதாரத்தைக் காட்டினால்தான் கஸாப் பாகிஸ்தானி என்பதை ஒப்புக் கொள்வோம் எனவும் அது கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications