மும்பை தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாதான் காரணம்: பிரவுன்

இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் டெல்லி வந்துள்ளார். இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்து மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக விவாதித்தார்.
பிரவுன் - மன்மோகன் சிங் சந்திப்பின்போது வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ. நாயர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது, மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை பிரவுனிடம் இந்தியா பகிர்ந்து கொண்டதாக கூற்பபடுகிறது. பாகிஸ்தானுக்கும், இந்த சம்பவத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து விரிவாக விவரித்ததாகவும் கருதப்படுகிறது.
மும்பை சம்பவம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் பிரவுன் டெல்லி வந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இங்கிலாந்து போலீஸ் குழு மும்பை வந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது நினைவிருக்கலாம்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவுன், மும்பையில் நடந்த மிகக் கொடுமையான தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் காரணம். இதற்கு பாகிஸ்தான் கண்டிப்பாக பதிலளித்தாக வேண்டும்.
நான் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்திக்கும்போது நிச்சயம் டெல்லியின் கவலைகளை அவரிடம் தெரிவிப்பேன்.
தீவிரவாதிகளுக்கு யாரும் அடைக்கலம் தர முயலக் கூடாது. இதுதொடர்பாக உலக சமுதாயம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு யாரும் நிதியுதவி செய்யக் கூடாது. அதைத் தடுக்கும் வகையில் உலக நாடுகள் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.
இந்திய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானும் சிலரைக் கைது செய்துள்ளது. இந்த கொடும் செயலுக்குக் காரணம் லஷ்கர் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது பாகிஸ்தானின் கடமை என்றார் பிரவுன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications