இந்தியா பொறுப்பான நாடு - பாக்.கை தாக்காது: கிலானி
இஸ்லாமாபாத்: இந்தியா பொறுப்பான நாடு. எனவே பாகிஸ்தான் மீது வான் வழித் தாக்குதலை அது மேற்கொள்ளாது என நம்பகிறேன் என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார்.
இதுகுறித்து நியூஸ் இன்டர்நேஷனல் என்ற நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், உலக நாடுகளின் முயற்சியால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டம் தணிந்துள்ளது.
இருப்பினும், மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தால் ஏற்ட்டுள்ள இந்த காயம் ஆற சற்று காலம் தேவைப்படும். அதுவரை பதட்டம் நீடிக்கத்தான் செய்யும்.
மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தான் இந்தியாவிடம் கோரியுள்ளது. ஆனால் இதுவரை இந்தியா தரவில்லை.
பாகிஸ்தானைச் சேர்ந்த யாரும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள். அதேசமயம், பாகிஸ்தான் மண்ணை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இந்தியா பொறுப்பான நாடு. எனவே பாகிஸ்தான் மீது விமானத் தாக்குதலை இந்தியா நடத்துமா என்ற கேள்வியே எழவில்லை. எழவும் செய்யாது.
பாகிஸ்தானில்தான், மும்பைத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று இந்தியா சொல்கிறது. அப்படியானால் அதற்கான ஆதாரங்களை அவர்கள் காட்டட்டுமே என்றார் கிலானி.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications