ஐ.எஸ்.ஐக்கும், லஷ்கருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: சர்தாரி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் லஷ்கர் இ தொய்பாவுக்கும் இடையே எந்தவிதமான உறவும், தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
நியூஸ்வீக் இதழுக்கு அவர் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ஐ.எஸ்.ஐக்கும், லஷ்கர் அமைப்புக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. லஷ்கர் அமைப்பு பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை ஐஎஸ்ஐ அனுமதிக்காது.
லஷ்கர் இ தொய்பா அமைப்பு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.
பாகிஸ்தானை முன்பு ஆட்சி புரிந்த சர்வாதிகாரிகள்தான் லஷ்கர் இ தொய்பா அமைப்பை உருவாக்கினர். ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் நிலைமை பெருமளவில் மாறி விட்டது.
பாகிஸ்தான் மண்ணை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. எங்களுக்கு எதிராகவோ அல்லது எங்களது நண்பர்களுக்கு எதிராகவோ பாகிஸ்தான் மண்ணை யாரும் பயன்படுத்த முடியாது.
தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிலரைக் கைது செய்துள்ளோம்.
எனது கடமையிலிருந்து நான் ஒருபோதும் தவற மாட்டேன். எனது மண்ணை யாரும் தவறாகப் பயன்படுத்துவதை நான் அனுமதிக்க முடியாது.
அதேபோல ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் மீதான தாக்குதலிலும் ஐஎஸ்ஐக்கு தொடர்பு இல்லை. இதுதொடர்பாக அமெரிக்க உளவுத்துறை எங்களிடம் எதுவும் பேசவில்லை. எந்த ஆதாரத்தையும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை. காபூல் சம்பவத்திற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்றார் அவர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications