தாக்கத் தயாரான இந்திய விமானப்படை-சிஎன்என்

பாகிஸ்தானை தாக்க மாட்டோம், தாக்க மாட்டோம் என இந்தியா திரும்பத் திரும்ப உத்தரவாதம் அளித்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானைத் தாக்க இந்திய விமானப்படை தயார்படுத்தப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சிக்கு பென்டகன் அதிகாரிகள் 3 பேர் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மும்பை சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்க இந்திய விமானப்படை தயார்படுத்தப்பட்டது. உச்சகட்ட உஷார் நிலையில் இந்திய விமானப்படை வைக்கப்பட்டது. வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையை இந்தியா தீவிரமாக கடைப்பிடித்திருந்தால் நிச்சயம், பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது முழு அளவிலான தாக்குதலை இந்திய விமானப்படைநடத்தியிருக்கும்.
ஆனால் அமெரிக்க மூத்த அதிகாரிகள் அமைதி காக்குமாறும், தாக்க வேண்டாம் எனவும் தொடர்ந்து இந்தியாவை வலியுறுத்தியதால் தனது திட்டத்தை இந்தியா நிறுத்தி வைத்தது.
பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கும் திட்டம் இந்தியாவிடம் இல்லை என்று புஷ் நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும் இந்தியா தாக்குவதற்குத் தயாராக இருந்தது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய விமானப்படை விமானங்கள், லாகூர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது என்பது நினைவிருக்கலாம். இதையடுத்து தாக்குதல் நடக்கலாம் என்ற பீதியில், ஷார்கோட், சர்கோதா ஆகிய இடங்களில் உள்ள தனது விமான தளங்களை பாகிஸ்தான் விமானப்படை உஷார்படுத்தியது.
ஆனால் இந்திய விமானப்படை விமானங்கள் ஊடுறுவவில்லை என்று இந்தியா மறுத்தது. அதேபோல, தெரியாமல் உள்ளே வந்திருக்கலாம் என பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications