2 ஆண்டுகளுக்கு முன்பே சிக்கினானாம் கஸாப்-பாக் விடும் 'கரடி'!

சி.எம். பரூக்கி என்ற அந்த வக்கீல் ராவல்பிண்டியிலிருந்து வெளியாகும் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், நேபாள ராணுவம் கடந்த 2006ம் ஆண்டு கஸாப் உள்ளிட்ட 200 பேரை கைது செய்தது. இந்திய உளவுப் பிரிவினரும், நேபாள ராணுவமும் சேர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான வழக்கு ஒன்று காத்மாண்டு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. அதில் நேபாள படையும், இந்திய தூதரகமும் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நான் இந்திய, பாகிஸ்தான் அரசுகளுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன். நேபாளத்தில் பத்திரிக்கையாளர் கூட்டம் ஒன்றையும் கூட்டி பேசியுள்ளேன்.
நான் நடத்தி வரும் என்.ஜி.ஓ அமைப்பை கஸாப்பின் பெற்றோர் அணுகி, தங்களது மகனை மீட்க உதவி கோரினர்.
வேலை பார்ப்பதற்கான பிசினஸ் விசாவில் கைதானவர்கள் நேபாளம் சென்றிருந்தனர். முறையான விசாவில்தான் அவர்கள் சென்றிருந்தனர். ஆனால் இப்படிச் சென்றவர்களை கைது செய்து, அவர்களை மும்பை போன்ற சம்பவத்தில் தொடர்புப்படுத்துவது இந்திய உளவுப் பிரிவின் வழக்கமாகும் என்று கூறியுள்ளார் பரூக்கி.
மும்பை சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்புகளை மறைக்க அந்த நாட்டு அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில் இப்போது பாகிஸ்தான் மீடியாக்களும் அந்த வேலையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications