குறைந்த காற்றழுத்தம் நீடிக்கிறது - மழை படிப்படியாக குறையும்

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்
எஸ்.ஆர்.ரமணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்று முன்தினம் தென் மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று காலை மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை மற்றும் அதையொட்டி உள்ள தென் மேற்கு வங்க கடலில் நீடிக்கிறது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக
மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யும்.
சென்னை நகரை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம். கடலூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த மழை புதன்கிழமை முதல் படிப்படியாக குறைந்துவிடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 17 செ.மீட்டர் மழையும், அண்ணாமலை நகர் 13 செ.மீட்டர், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி 12 செ.மீட்டர், மயிலாடுதுறை 9 செ.மீட்டர், புவனகிரி, சேத்தியா தோப்பு, காட்டுமன்னார்கோயில், பரங்கிப்பேட்டை தலா 7 செ.மீட்டர், தஞ்சாவூர் 6 செ.மீட்டர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், திருவிடைமருதூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் தலா 5
செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications