சர்க்கரைப் பொங்கல் வைக்கத் தேவையான பொருட்கள் இலவசம்: அரசு

நேற்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் சர்க்கரைப் பொங்கலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும், அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கள் திருநாளை தமிழர் திருநாளாக கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள், இனி தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்த நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், மா, வாழை, பலா என முக்கனித் தருக்களை நாட்டி, வண்ண வண்ண கோலங்களிட்டு, வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட, புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும், ஆடியும், சமத்துவ உணர்வு பரப்பியும், தமிழ்ப்புத்தாண்டு இதுவென துள்ளும் மகிழ்ச்சியால், அன்பை அள்ளிப் பொழிவர் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
அதையொட்டி தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் சிறப்பாகவும், இனிப்பாகவும், சர்க்கரைப் பொங்கலுடன் கொண்டாட இருக்கிறார்கள்.
சர்க்கரைப் பொங்கல் தயார் செய்வதற்குத் தேவையான பச்சரிசி 500 கிராம், வெல்லம் 500 கிராம், பாசிப் பருப்பு 100 கிராம், முந்திரி, திராட்சை, ஏலக்காயம் 20 கிராம் ஆகிய பொருட்கள், வாழ்த்துடன் கூடிய ஒரு தனிப்பையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் மூலம் எல்லா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1.1.09 முதல் 14.1.09 வரை இலவசமாக வழங்கப்படும்.
ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும், ரேஷன் கடைகளில் இந்த கால கட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சர்க்கரைப் பொங்கலுக்கான பொருட்கள் அடங்கிய பை ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications