மணிமுத்தாறு நிரம்புகிறது-பாசனத்திற்கு நீர் திறப்பு
திருநெல்வேலி: பாசனத்திற்காக மணிமுத்தாறு அணை திறக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை நிரம்பி வருகின்றது. அணை 118 அடி கொள்ளளவு கொண்டது. இதில் தற்போது 109.55 அடி நீர் மட்டம் உள்ளது. இதனால் பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டது.
பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் நாகராஜன், சேரன்மகாதேவி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வேல்துரை ஆகியோர் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர்.
இதனையடு்த்து 1வது, 2வது ரீச் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மணிமுத்தாறு அணையில் இருந்து வெளியேறும் நீர் அம்பை, நாங்குநேரி, நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரத்து 834 ஏக்கர் நிலத்தில் பாய்கிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தொடர்ந்து 120 நாட்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.
பாபநாசம் அணை மீண்டும் திறப்பு:
இதற்கிடையே, பாபநாசம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 143 அடியை எட்டியதால் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேலும் காட்டாறுகளில் அதிகளவில் தண்ணீர் வந்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் மழை ஓய்ந்ததால் அணை மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் கடந்த இரு நாட்களாக நெல்லை, தூத்துக்குடியில் மழை பெய்து வருகிறது.
இதனால் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2161 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே அணை நிரம்பி விட்டதால் பாதுகாப்பு கருதி இன்று காலை உபரி தண்ணீர் ஷட்டர் வழியாக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications