இலங்கை விமானப்படை வெறித் தாக்குதல் - 6 மாத குழந்தை உள்பட 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கிளிநொச்சி: விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்ட ஆத்திரத்தை அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை படைகள் திருப்பியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் விமானப்படை வெறித்தனமான தாக்குதலை நடத்தியது. இதில் 6 மாத கைக்குழந்தை உள்பட 2 பேர் பலியானார்கள். 9 பேர் படுகாயமடைந்தனர்.

வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறி வைத்து நேற்று காலை இலங்கை விமானப்படையின் மிக் -27 ரக போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசின.

அதைத் தொடர்ந்து வட்டக்கச்சி மருத்துவமனை அருகில் உள்ள மக்கள் குடியிருப்பக்கள் மீதும் தாக்குதல் நடத்தின.

இதில் வட்டக்கச்சி மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைப் பிரிவு கடுமையான சேதங்களுக்குள்ளானது.

தாக்குதல் நடைபெற்ற போது வெளிநோயாளிகள் பிரிவில் 500 பேரும், உள் நோயாளிகள் பிரிவில் 250 பேரும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர்.

முதல் வான்தாக்குதலில் காயமடைந்த மக்களுக்கு உடனடி சிகிச்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இரண்டாவது வான் தாக்குதல் மருத்துவமனைக்கு மிக அருகில் நடத்தப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நின்ற மக்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

மேலும் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்களும் பயந்து ஓடினர். தேர்வு நிறுத்தப்பட்டது.

இந்த வெறித்தனமான தாக்குதலில், சுயநிதி(28), ரவிசங்கர்(36), ஜீவன்(27), சிந்துஜன் (8), விதுசன்(10), நந்தகுமார் (44), மகேந்திரம்(59, யோகேஸ்வரன் (30), சின்னத்தம்பி லக்சுமி (52) ஆகியோர் காயமடைந்தனர்.

2 சிறுவர்கள் உள்பட 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+