தமிழகத்தில் கேட்டர்பில்லர் ரூ. 800 கோடி முதலீடு

அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனத்துக்கு 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 100க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. சுமார் 1 லட்சம் பேர் இதில் பணிபுரிகி்ன்றனர்.
இந்தியாவிலும் பெருமளவில் முதலீடு செய்துள்ள கேடர்பில்லர் நிறுவனத்தின் கட்டுமான இயந்திரங்கள், டீசல் மின் உற்பத்தி எந்திரங்கள் மற்றும் எஞ்சின் தயாரிப்புப் பிரிவுகள் தமிழகத்தில் திருவள்ளூரிலும், ஓசூரிலும் ஏற்கனவே அமைந்துள்ளன.
இதன்மூலம் 2,400 பேர் நேரடியாகவும், 7,500 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
இந்த நிறுவனம் தற்போது ரூ. 800 கோடி முதலீட்டில் கட்டுமானம் மற்றும் சுரங்கத் தொழில்களுக்குப் பயன்படும் கனரக எந்திர தயாரிப்புத் திட்டங்களை விரிவாக்கவுள்ளது.
திருவள்ளூர் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகளை விரிவாக்குவதுடன், சென்னைக்கு அருகில் மற்றுமொரு புதிய இடத்திலும் ஒரு தொழில் பிரிவைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் 600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 1,900 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
இந்த புதிய விரிவாக்கத் திட்டத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.அரசின் சார்பாக தொழில்துறை முதன்மைச் செயலாளர் எம்.எஃப். பாரூகி, கேடர்பில்லர் இந்தியா நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் தலைவர் கெவின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications