பறவைக் காய்ச்சல்: அஸ்ஸாம், மே.வங்கக் கோழித் தீவனத்தை தமிழகம் கொண்டு வரத் தடை
சென்னை: அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதால் அங்கிருந்து தமிழகத்திற்கு கோழித் தீவனத்தை இறக்குமதி செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது.
அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் எனப்படும் பேர்ட் ப்ளூ வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து அங்கு கோழிகளை கொன்று வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்ககளை அரசு எடுத்துள்ளது. இதுகுறித்து மாநில கால்நடைத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கூறுகையில், தமிழகத்தில் இதுவரை ஒருமுறை கூட பறவைக் காய்ச்சல் வந்ததில்லை.
தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கவுள்ளோம். ஒரு மண்டலத்தில் பறவைக் காய்ச்சல் வந்தால் அங்குள்ள கோழிகளை அடுத்த மண்டலத்திற்கு மாற்றி விடலாம். இதன் மூலம் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும்.
இதுதொடர்பான ஆய்வுக் கூட்டம் வருகிற 26ம் தேதி கோவையில் நடைபெறவுள்ளது. அதில், கோழி வளர்ப்பில் அதிக அளவில் ஈடுபட்டுள்ள கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் எங்கும் பறவைக் காய்ச்சல் இல்லை. எனவே மக்கள் பீதி அடையத் தேவையில்லை. கோழிக்கறியையும், முட்டையையும் தாராளமாக சாப்பிடலாம்.
அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவிய உடனேயே ஐந்து இடங்களில் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன.
அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து கோழித்தீவனம் உள்ளிட்ட பல பொருட்களை வாங்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications