கர்கரே மரணம் குறித்த சர்ச்சை-அந்துலே ராஜினாமா
டெல்லி: மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட விதம் குறித்து சந்தேகம் எழுப்பி சிக்கலில் மாட்டிய மத்திய சிறுபான்மை நலத்துறை இணையமைச்சர் அந்துலே பிரதமரி்ன் உத்தரவையடுத்து ராஜினாமா கடிதம் தந்துள்ளார்.
ஹேமந்த் கர்கரே உண்மையிலேயே தீவிரவாதிகளால்தான் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்று நேற்று கேட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் அந்துலே.
அவரது இந்த கருத்துக்கு பாஜக கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இதுதொடர்பாக லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் அமளி ஏற்பட்டது.
இந்த நிலையி்ல தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்து பிரதமருக்கு அந்துலே நேற்று கடிதம் அனுப்பினார். அதில்,
ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதை நான் மறுக்கவில்லை, சந்தேகப்படவில்லை. அதேபோல கர்கரேவின் தியாகத்தையும் நான் சந்தேகப்படவில்லை.
உண்மையில், கர்கரேவை குறி வைத்துக் கொள்ள தீவிரவாதிகளுக்கு எந்த நோக்கமும் இல்லை. கர்கரே தீவிரவாதத்திற்குத்தான் பலியானா அல்லது தீவிரவாதத்தைத் தாண்டி வேறு காரணம் இருந்ததா என்பதுதான் எனக்குப் புரியாமல் உள்ளது.
சில வழக்குகளில் முஸ்லீம் அல்லாதோர் சம்பந்தப்பட்டிருப்பதை அவர் கண்டுபிடித்தார். தீவிரவாதத்தின் அடி ஆழத்திற்குச் செல்ல முயலும் யாரையும் தீவிரவாதிகள் நிச்சயம் குறி வைப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறியிருந்தார் அந்துலே.
ஆனால், அந்துலேவின் விளக்கத்தை பிரதமர் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இந்த விஷயத்தில் தேவையில்லாத பிரச்சனை கிளப்பி மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தியதாக அவரை சோனியாவும் கடிந்து கொண்டார்.
இதையடுத்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை அந்துலே பிரதமருக்கு அனுப்பினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications