கள்ளதொடர்பு-கண்டித்த கணவரை கொன்ற பெண்
சென்னை: தனது கள்ளத் தொடர்புகளைக் கண்டித்த கணவரை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்து விட்டு தலைமறைவானார் மனைவி.
சென்னையில் உள்ள ஒரு லாட்ஜில் இந்த படுகொலை நடந்தது.
சென்னை டி.பி. சத்திரம் மெயின் ரோடு 156வது பிளாக்கை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரவீன் (32). இவரது மனைவி நிக்கோலஸ் (27) என்ற ஆங்கிலோ இந்தியப் பெண். இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 3 குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு முன்பே நிக்கோலஸுக்கு பல ஆண்களுடன் பழக்கம் இருந்தது. திருமணமான பின்னரும் இதைத் தங்கு தடையின்றி தொடர்ந்துள்ளார் நிக்கோலஸ்.
இதை பிரவீன் எதிர்க்கவே இருவருக்கும் சண்டை மூண்டு வந்தது.
சில மாதங்களுக்கு முன்பு பிரவீனை விட்டுப் பிரிந்து சென்றார் நிக்கோலஸ். இதனால் மனம் உடைந்த அவர், மனைவியை சேர்த்து வைக்கும்படி போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார். போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைத்தனர்.
இந் நிலையில், கடந்த 10 நாட்களாக பிரவீனும், நிக்கோலசும் வீட்டிற்கு செல்லாமல் குழந்தைகளுடன் அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தனர்.
அங்கும் இருவரும் சண்டை பிடித்தபடி இருந்தன. நேற்று மாலை நிக்கோலஸ் லாட்ஜ் அறையில் இருந்து கைகளில் ரத்தக் கறையோடு ஓடி வந்தார்.
இதைக் கண்ட லாட்ஜ் மானேஜர் பதறியபடி அறைக்கு ஓடினார். அங்கு பிரவீன் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரைச் சுற்றி 3 குழந்தைகளும் அழுதபடி நின்றிருந்தனர்.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் பறந்தது. போலீசார் விரைந்து வந்து பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிவிட்ட நிக்கோலஸை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications