ஊழல் அரசு ஊழியர்களின் சொத்துக்களை பறிக்க புது சட்டம்
புதுடெல்லி: அரசு ஊழியர்கள் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட்டிருப்போர், லஞ்சம் வாங்கி சேர்த்த சட்டவிரோதமான சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் வகையிலான புதிய சட்ட மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொது சேவையில் ஈடுபடுவோர், மற்றும் அரசு அதிகாரிகள், தங்கள் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தால், அவர்கள் மீது தற்போது, 1988-ம் ஆண்டின் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சட்டத்தை கடுமையாக்கி, ஊழல் தடுப்பு திருத்த மசோதா-2008 என்ற புதிய மசோதாவை, மத்திய அரசு தயாரித்து உள்ளது.
இந்த மசோதாவை லோக்சபாவில், பிரதமர் அலுவலகத்துறை இணை அமைச்சர் பிருத்வி ராஜ் சவான் தாக்கல் செய்தார்.
அதன்படி, லஞ்சம் வாங்கும் அரசு ஊழியரின் சொத்துக்களை, வழக்கின் ஆரம்ப கட்டத்திலேயே, பறிமுதல் செய்ய, இந்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு இந்த மசோதா அதிகாரம் கொடுக்கிறது. தீர்ப்பு வந்த பின்தான், சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பது இல்லை.
சட்டக் கமிஷன் கொடுத்த பரி்ந்துரையின் அடிப்படையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சவான் தெரிவித்தார்.
ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இந்த மசோதா சட்டமாக்கப்படும்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications