தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் கடலோர கமாண்ட்கள்
டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் ஒருங்கிணைந்த கடலோர கமாண்ட்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது இதேபோன்ற ராணுவ கமாண்ட்கள் ஜம்மு காஷ்மீர் மற்றும் அஸ்ஸாமில் உள்ளன. இங்கு ராணுவம், மத்திய புறக்காவல்படை, புலனாய்வு அமைப்புகள், மாநில போலீஸாரை இணைத்து இந்த கமாண்ட் செயல்பட்டு வருகிறது.
அதேபோல கடற்படை, கடலோரக் காவல்படை, மாநில கடலோரப் போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகள் இணைந்த அமைப்பாக புதிய கடலோர கமாண்ட்கள் செயல்படும்.
தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இத்தகைய கமாண்ட்கள் அமைக்கப்படும்.
ஏற்கனவே தேசிய அளவில் கடலோர கமாண்ட் ஒன்று அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
மாநிலங்களில் அமைக்கப்படும் கடலோர கமாண்ட்களின் தலைவராக சம்பந்தப்பட்ட மாநில முதல்வர் அல்லது தலைமைச் செயலாளர் செயல்படுவார். செயல் தலைமைப் பொறுப்பை, பிராந்திய கடற்படை அல்லது கடலோரக் காவல் படைத் தலைவர் வகிப்பார்.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த புதிய கமாண்ட்கள் அமைக்கப்படும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications