கணவரைக் கொன்று தப்பிய நிக்கோலா காதலனுடன் பொதுமக்களிடம் சிக்கினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக் காதலுக்குத் தடையாக இருந்த கணவரை மிகக் கொடூரமாகக் கொன்று விட்டு காதலனுடன் தப்பிய ஆங்கிலோ இந்தியப் பெண் நிக்கோலாவை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவருடைய மனைவி நிக்கோலா. இவர் ஆங்கிலோ இந்தியப் பெண் ஆவார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.

வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு தினசரி ஆட்டோ மூலம் சென்று வந்த நிக்கோலா, ஆட்டோ டிரைவர் மணிமாறனுடன் கள்ளக்காதல் கொண்டார். இதை கண்டித்துள்ளார் பிரவீன். ஆனால் அதை கண்டுகொள்ளவில்லை நிக்கோலா.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அமைந்தகரையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் மனைவி குழந்தைகளுடன் தங்கியிருந்தார் பிரவீன். அப்போது பிரவீன் குத்திக் கொல்லப்பட்டார். மிகக் கொடூரமாகக் கொலை செய்து விட்டு நிக்கோலா தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து நிக்கோலாவை போலீஸார் தேடி வந்தனர். விசாரணையில் கொலையில் மணிமாறனுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை நிக்கோலா, ஆட்டோ டிரைவர் மணிமாறன் ஆகியோர் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தபோது அவர்களை பொதுமக்கள் பார்த்து விட்டனர்.

இதையடுத்து ஆட்டோவை துரத்தினர். சில நிமிட துரத்தலுக்குப் பின்னர் ஆட்டோ மடக்கப்பட்டது. பின்னர் அதிலிருந்த நிக்கோலா மற்றும் மணிமாறனை அம்பத்தூர் போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

போலீஸார் அவர்கள் இருவரையும் பிடித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

அங்கு வைத்து இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், பிரவீனைக் கொன்றது மணிமாறன் என்பதும், அதற்கு நிக்கோலா உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.

பிரவீன் கால்கள் இரண்டையும் நிக்கோலா பிடித்துக் கொள்ள அவரது நெஞ்சின் மீது ஏறி அமர்ந்து கொடூரமாகக் குத்திக் கொன்றுள்ளார் மணிமாறன். நிக்கோலா முன்பக்கமாக ஓடித் தப்பியுள்ளார். மணிமாறன் பின்பக்கமாக தப்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் காவலில் எடுத்து விரிவாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+