போலியோ: ஜெயா டிவி திட்டமிட்டு பரப்பிய வதந்தி-அரசு
சென்னை: போலியோ சொட்டு மருந்து கொடுத்த குழந்தைகள் இறந்ததாக பரப்பப்படும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம். ஜெயா டிவி திட்டமிட்டு செய்யும் செயல் இது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து திட்டமிட்டபடி கொடுக்கப்பட்டது.
நேற்று காலை 11 மணியளவில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு குழந்தை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு இறந்து போனதாக ஜெயா டிவி என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் செய்தி பரப்பியது. இது திட்டமிட்டு மக்களிடையை பரப்பப்பட்ட வதந்தி. இதனால் மக்கள் மத்தியில் அது பீதியையும், கலவரத்தையும் உண்டாக்கியது.
ஈரோடு மாவட்டத்தில் இறந்து போனதாக கூறப்பட்ட குழந்தை மூளை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது. அதே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 157 குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அந்தக் குழந்தைகள் அனைவரும் நலமாக உள்ளனர்.
உண்மை இவ்வாறிருக்க ஜெயா டிவி பரப்பிய தவறான செய்தியால், சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து நேரிடுமோ என அச்சமுற்று குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்காக விரைந்தனர்.
அத்தியாவசியத் தேவையான போலியோ சொட்டு மருந்து கொடுப்பதில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் ஜெயா டிவி பொய்ச் செய்தியைப் பரப்பி ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர்களைக் கலவரப்படுத்தி பதறச் செய்தது கண்டிக்கத்தக்கதாகும் என்று கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications