மனு தாக்கல் செய்தார் லதா-பிரச்சாரத்தில் அழகிரி

இதற்கிடையே, முன்னதாக திமுக தேர்தல் பணிக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்த மு.க.அழகிரி, இன்று தேர்தல் பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.
லதா அதியமான் திருமங்கலத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனுவை தாசில்தாரிடம் தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் ஸ்டாலின், மு.க.அழகிரி, காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோரும் வந்திருந்தனர்.
தேர்தல் பணி-மீண்டும் அழகிரி:
லதா அதியமான் மனு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி,
எனக்கு கண் அறுவை சிகிச்சை நடைபெறுவதாக இருந்தது. அதன் காரணமாகவே திருமங்கலத்தில் தேர்தல் பணிக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தேன். ஆனால் தற்போது என் தம்பி ஸ்டாலின்ன் வேண்டுகோளை ஏற்று நான் தேர்தல் பணிக்குழு தலைவராக தொடர முடிவு செய்துள்ளேன் என்றார்.
திருமங்கலத்தில் தனது ஆதரவாளரான எஸ்ஸார் கோபியை வேட்பாளராக அறிவிக்காததால் அழகிரி அதிருப்தியில் இருந்தார். இதையடுத்து அவரை சந்தித்து ஸ்டாலின் சமாதானப்படுத்தினார்.
ஆனால், நேற்று மீண்டும் தேர்தல் பணிக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் அழகிரி. இந் நிலையில் மீண்டும் தேர்தல் பணியில் நேரடியாகக் களமிறங்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து அங்கு திமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சி பரவியுள்ளது.
சரத் வேட்பாளரும் மனு தாக்கல்:
அதே போல அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நேற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பத்மநாபனும் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற 26ம் தேதி கடைசி நாளாகும்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications