இந்தியாவில் ஊடுறுவ பாக். போட்ட சுரங்கம்!
ஜோத்பூர்: பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்குள் ஊடுறுவுவதற்கு வசதியாக, பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் போட்ட சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகில் இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ரகசியமாக நுழையும் வகையில் பூமிக்கடியில் சுரங்கப் பாதை அமைத்து சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக ஊடுருவி வந்துள்ளனர் என்ற உண்மை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவினுள் ஊடுருவி பல்வேறு நாச வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு பயிற்சி முகாம்கள் மூலம் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து இந்தியாவினுள் அனுப்பிக் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவும் சமூக விரோதிகள் தீவிரவாதச் செயல்கள் மட்டும் இல்லாமல் போதைப் பொருள் கடத்தல், கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுதல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
பாகிஸ்தான் அரசாங்கமே இந்திய ரூபாய் நோட்டுகளைப் போன்ற கள்ள நோட்டுகளைப் போலியாக அச்சடித்து இது போன்ற நபர்கள் மூலம் புழக்கத்தில் விட்டு இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயல்வதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
பாகிஸ்தானுக்குள் போய் தாக்கத்தான் நமது அரசு தயங்குகிறது. ஆனால் எல்லைகளையாவது தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா. ஆனால் நமது கண்காணிப்பு கண்கள் மீது மண்ணைத் தூவி விட்டு பக்காவான ஒரு சுரங்கப் பாதையை அமைத்துள்ளனர் பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள்.
சில நாட்களுக்கு முன்னர் கையில் போதைப் பொருட்களுடன் பிடிபட்ட இரண்டு கடத்தல்காரர்களை விசாரித்தபோதுதான் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. அவர்கள் கூறிய தகவல்படி இந்த சுரங்கப் பாதையை பல காலமாகவே கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications