புத்தாண்டு கொண்டாட்டம்-சென்னை போலீஸ் கட்டுப்பாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நகரில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு முதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோரின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும். விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் மனதில் பதிய செய்து, விபத்தால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும் ஆணையர் ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்தார்.

அதன்படி ஐந்து முக்கியமான போக்குவரத்து விதிகள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

முக்கிய சாலை சந்திப்புகளில் ஸ்டாப் லைன்' எனப்படும் நிறுத்து கோட்டை (வெள்ளை கோடு), வாகனங்கள் தாண்டி வராமல் தடுப்பது பற்றியும், நோ பார்க்கிங்' பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்பது பற்றியும், ஆட்டோக்களை கண்ட இடங்களில் நிறுத்தக்கூடாது என்பது பற்றியும், மாநகர பஸ்களை நடு ரோட்டில் நிறுத்தாமல் ஸ்டாப்'களில் நிறுத்த டிரைவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குவது பற்றியும், கடைகளுக்கு முன்பு ரோட்டில் கடைக்காரர்களும், கடை ஊழியர்களும் தங்களது வாகனங்களை நிறுத்தக்கூடாது என்பது பற்றியும் முதல் கட்டமாக 10 நாட்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

விழிப்புணர்வு பிரசாரம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் போக்குவரத்து போலீசாரும், சட்டம்-ஒழுங்கு போலீசாரும் இணைந்து ஈடுபட்டனர்.

இந்த பிரசாரம் அண்ணாசாலையிலும், ஈ.வே.ரா பெரியார் நெடுஞ்சாலையிலும் முதல் கட்டமாக அமல் செய்யப்பட்டது. மற்ற இடங்களிலும் படிப்படியாக செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசாரத்தை அண்ணா சாலை, ஸ்பென்சர் அருகே ஆணையர் ராதாகிருஷ்ணன் முறைப்படி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விழிப்புணர்வு பிரசாரம் வருகிற 31-ந் தேதி வரை அமலில் இருக்கும். தினமும் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் சட்டம்-ஒழுங்கு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து ஈடுபடுவார்கள்.

பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் போலீசாரின் விழிப்புணர்வு பிரசாரத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிரசாரத்தில் சொல்லப்படும் போக்குவரத்து விதிமுறைகளை மக்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

இதையடுத்து புத்தாண்டு முதல் மேற்சொன்ன விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் கட்டுப்பாடு:

போதையிலும், அதிவேகமாகவும் வாகனம் ஓட்டுபவர்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும். போதையில் வருபவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு வேறு ஒரு டிரைவர் அமர்த்திக் கொள்ள வேண்டும். புத்தாண்டை மக்கள் சந்தோஷமாக கொண்டாடலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் சட்டத்திற்கு புறம்பான எந்த காரியங்களிலும் மக்கள் ஈடுபடக்கூடாது.

புத்தாண்டு அன்று பெண்களை கேலி-கிண்டல் செய்வது, சாயத் தண்ணீர் அடிப்பது, விசில் அடித்து கலாட்டா செய்வது, போதையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்வது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.

நட்சத்திர ஓட்டல்களுக்கு புத்தாண்டை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது பற்றி விதிமுறைகள் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் முன்கூட்டியே காவல்துறை அனுமதி பெற வேண்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+