கட்டணத்தைக் குறைக்க முடியாது-கிங்பிஷ்ஷர் அடம்!!
மும்பை: விமான எரிபொருளுக்கான வரிகள் மற்றும் விலைக் குறைப்பை மத்திய அரசு அறிவித்தாலும், இப்போதைக்கு கட்டணத்தைக் குறைப்பதாக இல்லை என விஜய் மல்லையாவின் கிங்பிஷ்ஷர் நிறுவனம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து 7 வது முறையாக விமான எரிபொருளுக்கான விலையை மத்திய அரசு குறைத்து அறிவித்தது. இதன் அடிப்படையில் விமான நிறுவனங்களின் பயணிகளின் கட்டணத்தை குறைக்கும்படியும், அரசு அளித்த சலுகைகல் பயணிகளுக்கும் சேரவேண்டும் என்றும் பிரபுல் பட்டேல் கேட்டுக் கொண்டார்.
இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் போன்ற விமான நிறுவனங்கள் நேரடி விலை குறைப்பில் ஈடுபடாமல் பரிமாற்றுக் கட்டணத்தில் ஓரளவு குறைப்பதாக அறிவித்தன. அரசுக்கு சொந்தமான இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா மற்றும் இந்தியனில் கட்டணக் குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. ஜெட் ஏர்வேஸும்கூட கட்டணக் குறைப்பை அறிவித்துள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் விமான நிறுவனமான கிங்பஷர் மட்டும் கட்டண குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதைத் தொடர்ந்து, கிங்பிஷ்ஷர் உடனடியாக விலையை குறைக்க வேண்டுகோள் விடுத்தார் பிரபுல் படேல்.
கிங்பிஷ்ஷரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
விமான எரிபொருளுக்கான விலை குறைக்கப்படாதபோது எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை இப்பொழுதுதான் சிறிதளவு போக்கி வருகிறோம். பல எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக கடன் பாக்கி இன்னும் இருக்கிறது. எரி பொருளுக்கான விலை மேலும் குறையும் பட்சத்தில் இது பற்றி கலந்து ஆலோசிக்க உள்ளோம். இதனால் தற்போதைக்கு விமான பயணக்கட்டணம் குறைய வாய்ப்புகள் இல்லை. மக்களும் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications