தேசிய புலனாய்வு ஏஜென்சி: மாநில உரிமைகளை பறிக்க கூடாது - டி.ராஜா
வேலூர்: தேசிய புலனாய்வு அமைப்பு மாநில அரசின் உரிமைகளை பறிக்க கூடாது. அதற்கேற்ற வகையில் அதில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா வேலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மாற்று அணி உருவாக்கும் முயற்சி தற்போது வெற்றி பெறும் சூழலில் உள்ளது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டும். அங்கு மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்ப இந்திய அரசு உரிய முயற்சிகளை எடுக்கவேண்டும்.
தேசிய புலனாய்வு அமைப்பு மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடியதாக இருக்க கூடாது. அதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று இடதுசாரிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மாநில அரசு உளவு துறைகளையும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் சேர்த்து இணைந்து ஈடுபடுத்த வேண்டும்.
குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்கு வீடு விற்பனை செய்ய கூடாது. முஸ்லிம்களுக்கு வீடு வாடகை அளிக்க கூடாது என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் செயலை தடுக்க உரிய சட்ட திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications