அதிமுக-காங். கூட்டணி பேச்சு: சிபிஎம் அதிர்ச்சி

விடுதலைப் புலிகள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சத்தியமூர்த்தி பவன்த தாக்கப்பட்ட விவகாரத்தை காங்கிரஸ் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது. திருமாவளவனை கைது செய்தே தீர வேண்டும் என காங்கிரஸ் கோரி வருகிறது.
இந் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் சார்பில் ஒரு தூதுவர், கடந்த சனிக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 15 முதல் 20 எம்.பி. சீட்கள் வரை தரத் தயாராக இருப்பதாக ஜெயலலிதா கூறியதாகத் தெரிகிறது.
இந்த செய்தி, சமீபத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த இடதுசாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இந் நிலையில், கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் மற்றும் எம்.பி. டி.கே.ரங்கராஜன் ஆகியோர் நேற்று திடீரென ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.
அதிமுகவை மையமாக வைத்து வெளியாகியுள்ள இந்த புதிய கூட்டணிகள் தொடர்பான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதிமுக ஆட்சி-ஜெயலலிதா தலைமையில் உறுதிமொழி:
இதற்கிடையே மறைந்த முன்னாள் முதல்வசர் எம்.ஜி.ஆரின் 21ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் திரும்பக் கூறினர்.
அந்த உறுதியில்,
விரைவில் நடைபெறவுள்ள நாடாராளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று இந்திய அரசியலை தீர்மானிக்க இருக்கும் மதிநுட்பமும், வினைத் திட்பமும் கொண்ட ஜெயலலிதா தலைமையில் அணிவகுப்போம். எம்.ஜி.ஆர். கண்ட கனவை நினைவாக்கி வரும் ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி மலர சபதம் ஏற்போம் என்று கூறப்பட்டுள்ளது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications