அதிமுக வேட்பாளருக்கு வைகோ தீவிரப் பிரச்சாரம்
திருமங்கலம்: திருமங்கலம் தொகுதியில் டிசம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 6ம் தேதி வரை அதிமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தீவிர பிரச்சாரம் செய்கிறார்.
மதிமுக விட்டுத் தந்த இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் முத்துராமலிங்கம் போட்டியிடுகிறார்.
ஜனவரி 9ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி திருமங்கலத்தில் பிரச்சாரம் அனல் பறக்கிறது.
இதில் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்திற்கு ஆதரவாக வைகோ டிசம்பர் 27ம் தேதி தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். ஜனவர் 6 வரை பிரச்சாரம் செய்கிறார்.
மேலும் முத்துராமலிங்கத்திற்கு ஆதரவாக களப்பணிகள் செய்ய மதிமுக துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணனை ளின் ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார் வைகோ.
ஈழத்தில் தமிழர்களை காக்க புலிகளுக்கு ஆதரவு:
இதற்கிடையே சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தில் பெரியார் சிலையை திறந்து வைத்து வைகோ பேசுகையில்,
தமிழர் வாழ்வுக்கு வான்மழையாக திகழும் பெரியாரின் சிலையை திறந்து வைப்பதில் பெரும் பேறு அடைகிறேன். உயிரால், உடலால் பெரியார் மறைந்தாலும் கொள்கைகளால் அவர் வாழ்கிறார்.
வாழ்நாள் முழுவதும் அஞ்சா நெஞ்சராக விளங்கினார் பெரியார். வைக்கம் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார். ஆலயப்பிரவேசம் போராட்டத்தை நடத்தினார். தூக்கு தண்டணை தந்தாலும் கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று முழங்கியவர்.
அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தில் கைதாகி சிறையில் இறந்தவர்களில் லால்குடி பெரியசாமியும் ஒருவர். அவர் 16 வயது சிறுவன். அவனை சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தபோது அப்போதைய கவர்னர் அவனை மன்னித்து விட உத்தரவிட்டார். ஆனால் இனிமேல் இப்படிப்பட்ட போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறினார். ஆனால் என்னை விடுதலை செய்தாலும் அரசியல் சட்டத்தை தான் எரிப்பேன் என்றார். எதையும் எதிர்பாராமல் வாழ்ந்தார்.
அத்தகைய பெரியசாமி போன்ற கொள்கை தங்கங்களை கொண்ட கட்சி மதிமுக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுகவை அழிக்க முயற்சி நடந்தது. எத்தனை சோதனை வந்தபோதிலும் மனம் தளராமல் இருப்பவர்கள் தான் மதிமுகவை சேர்ந்தவர்கள்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம். தமிழ் இன மக்களை பாதுகாக்க விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம். நேற்றும் ஆதரித்தோம். இன்றும் ஆதரிக்கிறோம். நாளையும் ஆதரிப்போம் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications