திருமங்கலம்: பாஜக ஆதரவு யாருக்கு?

பாஜகவின் மாநில செயற்குழு வரும் 28 ம் தேதி நடைபெறுகிறது. அதில் திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட பாஜக செயல் வீரர்கள் கூட்டம் இல.கணேசன் தலைமையில் நடந்தது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
விடுதலைப் புலிகள் விஷயத்தில் தமிழகத்தில் ஒரு தரப்பினர் புலிகளுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர்
எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த விஷயத்தில் தமிழ் ஈழ மக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலை.
மேலும், இலங்கையில் நடக்கும் சம்பவங்களை கண்டறிய ஐ.நா. சார்பில் உண்மை கண்டறியும் குழுவை அனுப்ப வேண்டும்.
பாஜகவின் மாநில செயற்குழு வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. அன்று திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்று பாஜக முடிவு செய்யும் என்றார்.
அந்தக் கட்சியின் ஆதரவு அதிமுக அல்லது தேமுதிகவுக்குக் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
71 பூத்கள் பதற்றம் நிறைந்தவை:
இதற்கிடையே திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பூத் அமைக்கப்படுகிறது. மொத்தமுள்ள 190 பூத்களில் 71 பூத்கள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிராமத்திலும் டி.எஸ்.பி. தலைமையில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. மற்றும் 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக 200 இன்ஸ்பெக்டர்கள், 300 எஸ்.ஐகள், 18 மொபைல் ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக தென்மாவட்ட போலீசார் ஆயிரம் பேரை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இன்ஸ்பெக்டர் சுலைமான், எஸ்.ஐ பாஸ்கரன் தலைமையில் தேர்தல் பாதுகாப்பு பிரிவும் துவங்கப்பட்டுள்ளது.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications