ரூ. 500 லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது
சென்னை: 500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பெண் சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். ஒரே வாரத்தில் லஞ்ச வழக்கில் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் 7 பேர் சிக்கியுள்ளதால், அதிகாரிகள் மட்டத்தில் பீதி ஏற்பட்டுள்ளது.
லஞ்ச, லாவண்யம் இல்லாத அரசு அலுவலகத்தைப் பார்க்க சொர்க்கத்திற்குத்தான் போக வேண்டும். அப்படி ஒரு அவல நிலை தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நிலவி வருகிறது.
லஞ்சம் வாங்குவோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் லஞ்சம் வாங்குவோரின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை. காரணம், லஞ்சம் வாங்கி பிடிபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் கிடையாது என்பதே.
இந்த நிலையில் சமீப காலமாக லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 7 பேர் சிக்கியுள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஸ்கின், பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் பிடிபட்டனர்.
இதுதவிர புறநகர்ப் பகுதிகளில் மின் வாரிய உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்டோரும் லஞ்சம் வாங்கி கைதாகினர்.
இதனால் (லஞ்சம் வாங்கும்) அதிகாரிகள் மட்டத்தில் பீதி நிலவுகிறது.
இந்தநிலையில், நேற்று மைலாப்பூர் பெண் சப் இன்ஸ்பெக்டர் அனிதா (45) லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார்.
மைலாப்பூரைச் சேர்ந்த அபர்ணா என்ற பெண் தனது கணவர் சதீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுத்தார். திருமணமான மூன்றாண்டுகளில் அவர்களுக்குள் பிரிவினை ஏற்பட்டது.
இந்தப் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியி்ல இறங்காமல் கட்டப் பஞ்சாயத்தில் இறங்கினார் அனிதா. சதீஸ் மீது புகார் மனு வாங்க அபர்ணாவிடம் முதலில் ரூ.500 லஞ்சம் வாங்கினார். பின்னர் மனு மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க மேலும் ரூ.500 லஞ்சம் கேட்டார்.
ஏற்கனவே கணவரால் பாதிக்கப்பட்ட அபர்ணா, சப் இன்ஸ்பெக்டர் அனிதாவின் செயலால் வெகுண்டெழுந்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து டி.எஸ்.பி. சரவணன் தலைமையில், லஞ்ச ஒழிப்பு தனிப்படை போலீசார் காத்திருந்தனர்.
அப்போது, அபர்ணாவிடம் ரூ.500 லஞ்சம் வாங்கியபோது சப்-இன்ஸ்பெக்டர் அனிதா கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். போலீசார் பிடித்தவுடன் பணத்தை வீசிவிட்டு அனிதா தப்பி ஓட பார்த்தார்.
ஆனால் பெண் போலீஸ் உதவியோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
ஏற்கனவே, சென்னை நகரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி அடுத்தடுத்து காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பிடிபட்டாலும் கூட லஞ்சம் வாங்குவதை ஒரு தொழிலாகவே செய்து வரும் பலர் சற்றும் கலங்காமல் தங்களது தேட்டையை தொடர்ந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் யாரிடமும் நேரடியாகப் பணம் வாங்குவதில்லை. ஏஜென்டுகளை வைத்துள்ளனர். அவர்களிடம் போய் பணத்தைக் கொடுத்தால் போதும். அந்த ஏஜென்டுகள், பணத்தை உரிய அதிகாரிகளின் கணக்கில் சேர்த்து விடுவார்கள்.
ஏஜென்டுகள் தவிர தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், பெட்டிக்கடைக்காரர்கள், டீக்கடைக்காரர்கள் உள்ளிட்டோரை வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் பணப்பட்டுவாடாவை பக்காவாக செய்து வருகிறார்களாம் இவர்கள்.
இந்த ஆண்டு இதுவரை 150க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் லஞ்சம் வாங்கி மாட்டியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வருவாய்த்துறையினர், மின்வாரிய ஊழியர்கள்தான்.
தற்போது காவல்துறையை களையெடுக்கும் விதமாக அதற்கு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் குறி வைத்து பிடித்து வருகின்றனராம்.
புகார் கொடுக்கலாம்:
லஞ்சம் கேட்போர் குறித்துப் புகார் கொடுக்க 044-24615989 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என லஞ்ச ஒழிப்பு போலீஸ் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications