ஜெ-விஜய்காந்த் கிருஸ்துமஸ் கொண்டாட்டம்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார்.
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ஜெயலலிதாவின் இல்லத்தில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பாதிரியார் ராஜா பிரபாகரன் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். சர்ச்சில் ஜோசப் வேதப் பகுதியை வாசித்தார். ஆயர் சாமுவேல் சுதாகர் முடிவு ஜெபம் செய்தார்.
இதையடுத்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த பேராயர்களும், ஆயர்களும், கிறிஸ்தவ சபை மக்களும், பிரமுகர்களும், ஜெயலலிதாவுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து பேராயர் பிரகாஷ், இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் என்.கிறிஸ்துதாஸ் மற்றும் இந்திய தேசிய குடியரசு கட்சியின் நிறுவன தலைவர் சி.அம்பேத்கர் பிரியன் ஆகியோர்து கிருஸ்துமஸ் கேக்குகளை வெட்டினார்கள்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் பி.எச்.பாண்டியன், அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவுச் செயலாளர் மனோஜ்பாண்டியன், சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஏ.ஜஸ்டின் செல்வராஜ், மீனவர் பிரிவு இணை செயலாளர் ஜெனிபர் சந்திரன், ஜெ.சி.டி.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இசைக் குழுவினர் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடல்களை பாடினர். பின்னர் கிருஸ்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிரார்த்தனை நடத்தினர்.
பின்னர் ஜெயலலிதா கேக் வெட்டி, வந்திருந்தவர்களுக்கு அளித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
விஜய்காந்தும்..:
'மரியாதை' படப்பிடிப்பிற்காக விஜயகாந்த் காரைக்குடியில் முகாமிட்டுள்ளார். இந் நிலையில் கிருஸ்துமஸ் தினத்தை அவர் அங்கேயே கொண்டாடினார்.
செஞ்சை புனித தெரசாள் ஆலயம் மற்றும் அரியக்குடி வளன்நகர் குழந்தை இயேசு ஆலயத்தில் வழிபாடு நடத்திய விஜயகாந்த், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கேக், பிரியாணி வழங்கினார்.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications