தூத்துக்குடியில் ரெளடி வெட்டிக் கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கோயில் அருகே தூங்கிக் கொண்டிருந்த ரெளடியை இன்று அதிகாலை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றது.
இது தொடர்பாக என்கெவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஜெயக்குமாரின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் 5-வது தெருவை சேர்ந்த ரெளடி சத்யன் மீது வழிப்பறி, அடிதடி, மிரட்டல், பணம் பறித்தல் என பல்வேறு வழக்குகள் தென்பாகம், மத்தியபாகம் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
நேற்றிரவு அங்குள்ள டாஸ்மக் கடையில் மது அருந்திய சத்யன் அதன் பிறகு சிதம்பரம் நகர் பழைய ஆர்டி்ஓ அலுவலகம் அருகே உள்ள காந்தாரியம்மன் கோவில் எதிரே தூங்கினார்.
அதிகாலை தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த விவேக் ஆனந்த், பக்கிள்புரம் ராஜ், முருகன் ஆகியோர் போதையில் தூங்கிக் கொண்டிருந்த சத்யனை சராமரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் சத்யன் அந்த இடத்திலேயே இறந்தார்.
கொலையில் ஈடுபட்ட இந்த மூவரும் போலீசாரின் என்கெவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஜெயக்குமாரின் கூட்டாளிகள் ஆவர்.












Click it and Unblock the Notifications