நியூசிலாந்தில் வேலை: ரூ24 லட்சம் மோசடி-ஏஜென்ட் கைது
சென்னை: நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 24 லட்சம் மோசடி செய்த ஏஜென்ட்டை போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (25). இவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில், சென்னை அம்பத்தூரில் செயல்பட்டுவரும் எக்ஸ்சலண்ட்' டிராவல்ஸ் என்ற நிறுவனம் வெளிநாட்டில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவை என்று விளம்பரப்படுத்தியது. இதை பார்த்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் காசிநாதனை அணுகினேன். அவர், என்னை நியூசிலாந்து நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறினார்.
இதற்காக என்னிடம் பெரிய அளவில் பணம் வாங்கினார். பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக்கொண்டார்.
இதேபோல, தேனி மாவட்டத்தை சேர்ந்த கேசவன், ராஜேஷ்குமார், விஜயராகவன், பாலமுருகன் ஆகியோரிடமும் காசிநாதன் நியூசிலாந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றார். மொத்தம் ரூ.24 லட்சம் வாங்கிக்கொண்டு எங்களை தாய்லாந்து அழைத்து சென்றார்.
தாய்லாந்து நாட்டில் பதிவு செய்து அங்கு விசா வாங்கித் தருவதாக கூறினார். போலி விசாவை வாங்கி எங்களிடம் கொடுத்துவிட்டு, இதன் மூலம் நியூசிலாந்து செல்லலாம் என்று தெரிவித்தார். ஆனால் எங்களை அழைத்துச் செல்லாமல், தாய்லாந்திலேயே தவிக்க விட்டு விட்டு, காசிநாதன் தப்பி வந்துவிட்டார். அதன் பின்னர் நாங்கள் பெரும் சிரமப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தோம்.
மோசடியில் ஈடுபட்ட காசிநாதன் மீதும், அவருடைய கூட்டாளிகள் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறியிருந்தார்.
புகாரை விசாரித்த போலீஸார் காசிநாதனைக் கைது செய்தனர். அவரது கூட்டாளிகளுக்கு வலை வீசப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications