லாகூர் குண்டுவெடிப்பு: தலிபான் கிளை பொறுப்பேற்றது-பாக். பொய் அம்பலம்
இஸ்லாமாபாத்: லாகூரில் நடந்த கார் குண்டுவெடிப்புக்கு தாங்கள்தான் காரணம் என தலிபான் ஆதரவு அமைப்பான அன்சர் வா முஹாஜிர் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் மூலம், இந்தியர் ஒருவர்தான் இதற்குக் காரணம் என்று கூறி அவரைக் கைது செய்து பாகிஸ்தான் நடத்திய நாடகம் அம்பலமாகிவிட்டது.
லாகூரில் அரசு அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோர் வசிக்கும் குடியிருப்பில் கார் குண்டுவெடித்தது. இதில் ஒரு பெண் பலியானார். சிலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் நடந்த அதே நாளில், கொல்கத்தாவைச் சேர்ந்த சதீஷ் ஆனந்த் சுக்லா என்பவரைக் கைது செய்துள்ளதாகவும், அவர்தான் இதற்குக் காரணம் என்றும், அவர் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார் எனவும் வேகமாக கதை அளந்திருந்தது பாகிஸ்தான்.
ஆனால் அது அத்தனையும் பொய் என்று தற்போது தெரிய வந்துள்ளது. தலிபான் ஆதரவு அமைப்பான அன்சர் வா முஹாஜிர் என்ற அமைப்பு, லாகூர் சம்பவத்திற்கு நாங்களே காரணம். இதுபோல மேலும் பல தாக்குதல்களை நடத்துவோம் என அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் கமாண்டர் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் டூபான் வசீர், பாகிஸ்தானின் தி நியூஸ் நாளிதழுக்கு போன் செய்து பேசினார். வடக்கு வசிரிஸ்தானிலிருந்து அவர் பேசியதாக தெரிகிறது.
அப்போது அந்த நபர் கூறுகையில், சமீபத்தில் வடக்கு வசிரிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய இரண்டு ஏவுகணைத் தாக்குதலுக்கு பழி வாங்கவே இதைச் செய்தோம்.
இதேபோல மேலும் பல தாக்குதல்களை எதிர்பாருங்கள். அரசு நிலைகள் மீதும், பாதுகாப்புப் படையினர் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று அந்தத் தீவிரவாதி கூறியுள்ளான்.
இதன் மூலம், சுக்லா என்ற இந்தியர்தான் இந்த சம்பவத்திற்குக் காரணம் என்று பாகிஸ்தான் கூறியது அப்படடமான பொய் என்பது 24 மணி நேரத்திலேயே அம்பலமாகி விட்டது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications